வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (05/07/2018)

கடைசி தொடர்பு:15:21 (05/07/2018)

`அவர்கள் வந்தால் புரட்சி நடக்காது; வறட்சிதான்!' - ரஜினி, கமல் குறித்து ஜெயக்குமார்

`ரஜினிகாந்த் கமல்ஹாசன் என யார் வந்தாலும் அரசியலில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது' என்கிறார் அமைச்சர் மீன்வளத்துறை ஜெயக்குமார்.

ஜெயக்குமார்

சென்னையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ` அரசு நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அவரது கடமையைச் செய்து வருகிறார். யாரும் எந்த விதிகளையும் மீறவில்லை' என்றவரிடம்,  

`ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட்டால், தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படும். தமிழ்த் திரை உலகைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து அரசியல் களத்தில் இறங்கினால் தமிழக அரசியலில் புரட்சி நிகழும் ' என நடிகர் சங்கத் தலைவர் விஷால் பேசியது குறித்து கேட்டபோது, இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், `ரஜினிகாந்த், கமல்ஹாசன் என யார் வந்தாலும் அரசியலில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது; அவர்கள் வந்தால் புரட்சி ஏற்பட வாய்ப்பில்லை; வறட்சி மட்டும் ஏற்படும். யார் ஒன்றிணைந்தாலும் எதுவும் நடக்காது' என்றார்.