`செயல்வீரர்கள் எப்போதும் என்னுடன்தான் உள்ளனர்’ - திருமண விழாவில் அழகிரி பேச்சு

``தி.மு.க-வில் உழைக்காதவர்கள், செயல்படாத தலைவர்கள் இருக்கிறார்கள், உண்மையான செயல்வீரர்கள் எப்போதும் என்னுடன் இங்கு உள்ளனர்” என்று மு.க.அழகிரி, ஸ்டாலினை மீண்டும் கிண்டல் அடித்து பேசியது தி.மு.க-வுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க அழகிரி


பாலமேடு அருகே தன்னுடைய ஆதரவாளர் மதுரைவீரன் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசிய மு.க.அழகிரி, ''மதுரையிலிருந்து இங்கு வரும்போது, திருமண விழாவுக்கு வருகிறேனா அல்லது கட்சி மாநாட்டுக்கு வருகிறேனா  என்று தெரியாத அளவுக்கு எனக்கு இருவண்ண கொடிகள், வரவேற்பு பேனர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தது போன்றவற்றை  பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையான செயல்வீரர்களும் தொண்டர்களும் எப்போதும் என்னுடன்தான் இங்கு இருக்கிறார்கள். கட்சியில் இப்போது உள்ளவர்கள் பதவிக்காகவே உள்ளனர்,  கட்சிக்கு உழைக்காதவர்களும்  செயல்படாத செயல்தலைவரும்தான் அங்கு உள்ளார்கள். ஆனால், செயல்வீரர்கள் எப்போது என்னோடுதான் உள்ளனர்'' என்றார்.

கடந்த மாதம் பி.எம்.மன்னன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டபோதும், இதேபோல் ஸ்டாலினை கிண்டலடித்து அழகிரி பேசியதும் கட்சிக்குள் சர்ச்சையானது. அவ்வபோது வாய்ப்பு கிடைக்கும்போது இதுபோல அழகிரி பேசி வருகிறார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!