வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (05/07/2018)

கடைசி தொடர்பு:16:53 (05/07/2018)

தொழிலதிபர் வீட்டில் ஆந்திர இளம்பெண் மர்ம மரணம்!

 இளம்பெண் மரணம் மாதிரி படம்

 சென்னை தொழிலதிபர் வீட்டில் வேலை செய்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண், மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

 சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர்  தொழிலதிபர் முருகன். இவரின் வீட்டில் வேலை செய்பவர் லட்சுமி. இவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். நேற்றிரவு வீட்டு வேலைகளை முடித்த லட்சுமி, முதல் மாடியில் தூங்கச் சென்றார். காலையில் அவர் எழுந்து வீட்டு வேலைகள் செய்ய வரவில்லை. இதனால், வீட்டில் உள்ளவர்கள் அவரைத் தேடினர். அப்போது முதல் மாடியில் உடலில் காயங்களுடன் லட்சுமி இறந்துகிடந்தார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்குச் சென்று லட்சுமியின் சடலத்தைப் போலீஸார் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக அவரின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொழிலதிபர் முருகனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். லட்சுமியின் பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். 

தொழிலதிபர் வீட்டில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.