சுவாமி வேதாந்த தேசிகர் 750-வது பிறந்த நாள் விழா !

சுவாமி வேதாந்த தேசிகர் அவர்களின் 750-வது பிறந்த நாள் விழா சென்னை வாணி மஹாலில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 8-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 

வேதாந்த தேசிகர்

விழாவையொட்டி மாலை 4.30 மணிக்கு நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட ஆன்மிகக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இரவு 7 மணிக்கு  ஆன்மிக அருளாளர் அனந்த பத்மநாப ஆச்சார்யார் தலைமையில் வேதாந்த தேசிகரின் 'ஹம்ஷ சந்தேஷ'த்தில் மிகவும் இடம்பெற்று இருப்பது பக்தி இலக்கியமா? சிருங்கார இலக்கியமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. `இரு கதை ஒரு தத்துவம்', `பாரத ரகசியம்' ஆகிய நூல்களின் வெளியீட்டுவிழாவும் நடைபெறவுள்ளன. இதில் முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

வருகிற 7- ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேசிக பிரபந்தம் `அரையர் சேவை' பற்றிய உரை, இரவு 7 மணிக்கு 'சந்தமிகு தமிழ் மறையோன் சுவாமி தேசிகன்' எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது.

வருகிற 8-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறார். அப்போது 'ராமானுஜ திக் விஜயம்' ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தேசிக பக்தி சாம்ராஜ்யம் செய்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!