``தி.மு.க சொல்வதை எல்லாம் பின்பற்ற முடியாது'' - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

தி.மு.க சொல்வதை எல்லாம் மத்திய அரசு பின்பற்ற முடியாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர் வழியாகத் தூத்துக்குடிக்கு 1,200 கோடி ரூபாயில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலில் சட்டசபையில் அமர்ந்து செயல்பட்டு ஜனநாயகக் கடமையாற்றிய பின் பிற பணிகளை மேற்கொள்ளட்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நக்சலைட்கள் வளருவதைத் தமிழக ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் துணை நிலை ஆளுநருக்குத்தான் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. தி.மு.க சொல்வதை எல்லாம் மத்திய அரசு பின்பற்ற முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தான் பின்பற்றுவோம்" என்றார் காட்டமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!