ரெய்டில் சிக்கிய சுதாதேவி ஐ.ஏ.எஸ்? - நாமக்கல்லைத் தொடர்ந்து அடுத்த அதிரடி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சுதாதேவி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சுதா தேவி வீடு

இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு திட்டத்துக்குப் பொருள்கள் வழங்கும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்கு சத்து மாவு விநியோகம் செய்யும் கிருஷ்டி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் . தமிழ்நாடு நுகர்பொருள் மேலாண்மை இயக்குநராக சுதாதேவி பணியாற்றி வருகிறார். சென்னை நெற்குன்றத்தில் உள்ள அவரின் வீட்டில் காலை முதல் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடர்பான பல்வேறு கேள்விகள் சுதாதேவியிடம் கேட்கப்பட்டு வருவதாகவும், ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!