கேப்டன் சிறப்பாகச் சிகிச்சை பெற்றுத் திரும்ப வேண்டும்! - கிடா வெட்டி பூஜை செய்த தொண்டர்கள்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால், அவர் பூரண குணமடைந்து திரும்பி வர வேண்டும் என்று மதுரை புறநகர் மாவட்டக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலில் இன்று சிறப்புப் பூஜைகள் செய்தனர். 

கேப்டன் சிறப்பாக

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்திருக்கும் அருள்மிகு முனியாண்டி சுவாமி கோயில் மிகவும் சக்தி மிக்கதாக மக்களால் நம்பப்படுகிறது. வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் பூஜை செய்த பின்புதான் தொடங்கும். ஜல்லிக்கட்டு வீரர்களும் பொதுமக்களும் இங்கு வந்து வணங்கிச் செல்வார்கள். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் விஜயகாந்த், பூரணமாகக் குணமடைந்து பழையபடி வர வேண்டும். அவரே தமிழக அரசியலை  மாற்றி்ட
வேண்டும் என்ற வேண்டுதலோடு மதுரை புறநகர் தே.மு.தி.க வடக்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலில் கிடா வெட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்சிகாலபூஜையும் சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கணபதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!