'கம் பேக் மோடி' என்று சொல்லும் காலம் வரும்! - மதுரையில் கலகலத்த தமிழிசை

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தை பா.ஜ.க.வினர் இன்று மதுரையில் நடத்தினார்கள். இவர்களுடன் மாமதுரை மக்கள் மன்றமும், மதுரை எய்ம்ஸ்கான மக்கள் இயக்கமும் இணைந்து நடத்துவதாக அறிவித்திருந்ததால் தொழில் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``தமிழகத்துக்கு பல  நல்ல திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வருவதால் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டும் ஸ்டாலின் ஒருநாள் வருத்தப்படுவார். மோடி பல விமானங்களை தமிழகத்தில் பறக்கவிட்டார். ஸ்டாலினும், வைகோவும் கறுப்பு பலூனை பறக்க விட்டார்கள்.  ஸ்டாலின் முதல்வராகப் போகிறார் என்று சிலர் நம்பிக்கையுடன் சொன்னார்கள். வைகோ அவருடன் சேர்ந்த பிறகு அது நடக்காது. பாகிஸ்தான்காரர்களை ஓட ஓட துரத்திய மோடியா தமிழக சாலை வழியாக செல்ல பயப்படுவார்? மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வந்ததற்கு பா.ஜ.க.வைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை. `கோ பேக் மோடி' என்று சொன்ன தமிழகத்தில், `கம் பேக் மோடி' என்று சொல்லும் காலம் வரும்" என்று பேசினார் தமிழிசை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!