''துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையத்தின் அதிகாரவரம்பில் திடீர் மாற்றம்..!''

அருணா ஜெகதீசன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் அருணா ஜெகதீன் தலைமையில் 1952-ஆம் ஆண்டு விசாரணை ஆணையங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 60 / 1952) கீழ்,  ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 22.05.2018 அன்று நிகழ்ந்த காவல் துறை துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இறப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவை தொடர்பான சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்யப்படும். இந்த ஆணையம், 23.05.2018-ல் நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையத்தின் ஆய்வு வரம்பானது, மற்றவற்களுகிடையே தூத்துக்குடியில் 22.05.2018 அன்று நிகழ்ந்த காவல் துறை துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இறப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவை தொடர்பான சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்வதற்காகும். தற்பொழுது, இந்த ஆய்வு வரம்பானது அரசாணை நிலை எண்.472, பொதுத் (சட்டம் (ம) ஒழுங்கு-எப்) துறை நாள் 04.07.2018 படி, 22.05.2018 தேதிக்கு பிறகு தூத்துக்குடியிலும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடந்த சம்பவங்களையும் சேர்த்து விசாரணை செய்வதற்கு நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணைஆணையத்தின் அதிகாரவரம்பு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அதனால், பொது மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் 22.05.2018 அன்று நிகழ்ந்த சம்பவம் மற்றும் அதற்குப் பின்னிட்ட நாட்களில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிந்த கருத்துக்கள் மற்றும் விவரங்களை தகுதி வாய்ந்த நபர்களின் வாக்குமூலமாகவோ அல்லது மனுக்கள் மூலமாகவோ ஆணையத்திற்கு 27.07.2018 வரை தெரியப்படுத்தலாம் என்று இதன் மூலமாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சத்தியபிரமாண உறுதிமொழிப் பத்திரங்கள் (1+2 நகல்கள்) அரசு மாளிகை எண். என்.சி.பி.28, பி.எஸ்.குமாராசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் சாலை) சென்னை-28 என்ற விலாசத்திற்கோ அல்லது அரசு பழைய சுற்றுலா மாளிகை, தெற்கு கடற்கரை சாலை , தூத்துக்குடி 628 001 என்ற முகவரிக்கோ, நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். இத்தகவலை தகவலை நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் செயலாளர் நேற்று (05.07.2018) தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!