`மக்கள் வரிப்பணத்தில் ஆளுநர் ஆடம்பரச் செலவு’ - விளக்கம் கேட்கும் ஒடிஸா அரசு

`மக்கள் வரிப்பணத்தில் ஆளுநர் ஆடம்பரச் செலவு’ - விளக்கம் கேட்கும் ஒடிஸா அரசு

கணேஷ்லால்

டிஸா மாநில ஆளுநராக கணேஷ்லால் இருந்து வருகிறார். ஜூன் 10- ந் தேதி புவனேஸ்வரத்தில் இருந்து டெல்லிக்கு தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்து பயணித்துள்ளார். இதற்கு விமானச் செலவாக ரூ.41.8 லட்சம் ஆகியுள்ளது. ஜூன் 13-ந் தேதி டெல்லியில் இருந்து  ஹரியானாவில் உள்ள சிர்சா செல்வதற்கு ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துள்ளார். இதற்கு ரூ.5 லட்சம் செலவாகியுள்ளது. இந்த கட்டணங்களை செலுத்துமாறு ஆளுநர் மாளிகை ஒடிஸா மாநில அரசுக்கு பில் அனுப்பியுள்ளது. ஒடிஸா மாநில பொதுநிர்வாகத்துறை இலாகா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் உள்ளது. ஆளுநர் சுற்றுப்பயணத்துக்கான கட்டணத்தை  பார்த்து பொது நிர்வாகத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து ஆளுநரிடம் நிர்வாகத்துறையில் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தில்'' என்ன காரணத்துக்காக ஆளுநர் ஹரியானா மாநிலத்துக்கு சென்றார். எந்த சூழ்நிலையில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டது'' என கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே ஆளுநர்கள் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, மாதம் ரூ. 3.50 லட்சம் சம்பளம் பெறும் கவர்னர்களுக்கு படிகளும் அதிகளவில் வழங்கப்படுகின்றன. இது தவிர, தனியாக விமானம், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து மக்கள் பணத்தை வீணடிப்பாதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!