வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (06/07/2018)

கடைசி தொடர்பு:12:37 (06/07/2018)

8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்குத் தடைவிதிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு

'எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்குத் தடைவிதிக்க முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உயர் நீதிமன்றம்

சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச் சாலை அமைப்பதற்காக சேலம், திருவண்ணாமலை, தருமபுரியில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக தருமபுரியைச் சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், 'சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதற்குத் தடை விதிக்க வேண்டும். தருமபுரியில் நிலம் கையகப்படுத்துவதற்கு வருவாய் அதிகாரி பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், 'எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடைவிதிக்க முடியாது. இந்த மனு, எட்டு வழிச் சாலை தொடர்பான மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும்' என்று உத்தரவிட்டனர்.