ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் நீக்கம்..! உறுதி செய்த பல்கலைக்கழக நிர்வாகம்

அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து போராடிய மாணவர் உமர் கலித்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கும் முடிவை பல்கலைக்கழக உயர் மட்டக் குழு உறுதி செய்தது.

உமர் கலித்

நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அப்சல் குருவுக்கு 2016-ம் ஆண்டு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. அவருடைய தூக்குத் தண்டனைக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள், உமர் கலித், கண்ணையா குமார், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக 2016-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் உமர் கலித் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கியும், கண்ணையா குமாருக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் 13 மாணவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து மாணவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, பல்கலைக்கழக விசாரணை ஆணையம் இந்தத் முடிவை மறுபரீசீலனை செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டது. இதனையடுத்து, பல்கலைக்கழக உயர் மட்டக்குழு மாணவர்களிடம் விசாரணை நடத்திவந்தது. விசாரணை முடிவில், சில மாணவர்களுக்கு அபராதத்தொகையை குறைத்துள்ளது. ஆனால், கண்ணையா குமாருக்கு அதே அபராதத்தொகையும், உமர் கலித்தை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கும் முடிவையும் உறுதி செய்தது. பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அகில இந்திய மாணவர்கள் ஆணையம், 'பல்கலைக்கழக முடிவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!