லேட்தான்... ஆனால் லேட்டஸ்டாக இருக்கிறதா #SamsungOn6 ஸ்மார்ட்போன்?

தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்களால் சந்தையில் இருக்கும் போட்டியைச் சமாளிக்க முடியும் என நினைக்கிறது சாம்சங்

லேட்தான்... ஆனால் லேட்டஸ்டாக இருக்கிறதா #SamsungOn6 ஸ்மார்ட்போன்?

மொபைல் சந்தையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களாகப் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது சாம்சங் நிறுவனம். ஷியோமி, ஓப்போ போன்ற சீன நிறுவனங்களின் தாக்கத்தால் பல வருடங்களாகத் தக்கவைத்திருந்த முதலிடம் பறிபோகும் நிலைமையில் இருக்கிறது சாம்சங். சீன நிறுவனங்கள் அனைத்துமே ஆன்லைன் விற்பனையில் முழுக் கவனத்தைச் செலுத்துவதைத் பார்த்த சாம்சங்கும் அதைப் பின்பற்ற முயற்சி செய்கிறது.

சாம்சங் கேலக்ஸி on6

கடந்த மாதத்தில்தான் J சீரிஸில் இரண்டு மொபைல்கள் மற்றும் Galaxy A சீரிஸில் இரண்டு மொபைல்கள் என மொத்தம் நான்கு மொபைல்களை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக தனது On சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் Galaxy On6 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Galaxy on6

AMOLED டிஸ்ப்ளே

சாம்சங் இந்த மொபைலின் முக்கிய வசதியாகக் குறிப்பிடுவது இதன் டிஸ்ப்ளேவைத்தான். இதற்கு முன்பு வெளியான On சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலானவற்றில் TFT டிஸ்ப்ளே இருந்தது. ஆனால், இந்த on6 ஸ்மார்ட்போனில் இருப்பது  AMOLED டிஸ்ப்ளே. இந்த செக்மென்டில் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறைவு. அப்படியே இருந்தாலும் அது மற்ற சாம்சங் ஸ்மார்ட்போன்களாகத்தாம் இருக்கும். அப்படி டிஸ்ப்ளே விஷயத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது சாம்சங். அதன்படி பார்த்தால் டிஸ்ப்ளே இதன் மிகப்பெரிய பிளஸ். இந்த ஸ்மார்ட்போனில் 5.6  inch HD+ டிஸ்ப்ளே இருக்கிறது. இதன் மூலமாக  IPS டிஸ்ளேவை விடச் சிறப்பான காட்சி அனுபவத்தைப் பெற முடியும். 1.6  GHz ஆக்டாகோர்  Exynos 7870 புராஸசர் இதில் இருக்கிறது. இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே என்பதால் முன்புறம் எந்த பட்டன்களும் கிடையாது. அதற்குப் பதிலாக மூன்று கன்ட்ரோல்களும் திரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபேஸ் அன்லாக்

ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கேமராவுக்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர ஃபேஸ் அன்லாக் வசதியும் கூடுதலாக இருக்கிறது. 13-மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்புற கேமரா பிளாஷ் வசதியுடன் இருக்கிறது. மொபைலின் பின்புறம் பிளாஸ்டிக்கால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 4 GB ரேம் மற்றும் 64 GB இன்டர்னல் மெமரி இருக்கிறது இதனை 256 GB வரை நீட்டித்துக்கொள்ள முடியும். இதில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டைப் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும் இதில் 3000 mAh பேட்டரி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் Chat-over-Video என்ற புதிய வசதியைத் தருகிறது சாம்சங். இதன் மூலமாக வீடியோ பார்க்கும்போதே சாட் செய்ய முடியும்.

 Chat-over-Video

பட்ஜெட் செக்மென்டைப் பொறுத்தவரையில் சாம்சங் எப்பொழுதுமே கொஞ்சம் லேட் பிக்கப்தான். அதன் படி வழக்கம் போல on6 ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளேவுக்குக் கொடுத்த கவனத்தை மற்ற விஷயங்களில் கொடுக்க தவறியிருக்கிறது. இதே விலையில் சந்தையில் இருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டூயல் கேமராவைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதில் இருப்பது சிங்கிள் கேமராதான். பேட்டரி திறனும். டிஸ்ப்ளே அளவும் கூட சற்று குறைவாகவே இருக்கின்றன. மற்ற ஸ்மார்ட்போன்கள் மெட்டல் பிளஸ் பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டிருக்க இது முழுவதும் பிளாஸ்டிக் பின்புறம் இருப்பது இதன் தோற்றத்துக்கு மைனஸ். கறுப்பு மற்றும் நீலம் என இரண்டு நிறங்களில் 14,490 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!