`புதிய பேருந்துகளால் எங்களுக்கு எந்தப் பயனுமில்லை'- கொந்தளிக்கும் குன்னூர் மக்கள்

``நீலகிரி மாவட்டம், ஊட்டி போக்குவரத்துக் கழகக் கிளையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள 19 புதிய பேருந்துகளால் உள்ளூர் மக்களுக்குப் பயன் இல்லை. உள்ளூர் வழித்தடத்துக்கு கூடுதலாக புதிய பேருந்துகள் இயக்கினால் மட்டுமே பயன்'' என்கிறார் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் மனாேகரன்.

புதிய பேருந்து

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம், ஊட்டி கிளைக்கு வழங்கப்பட்ட 19 புதிய பேருந்துகள் சேவை இன்று தொடங்கியது, கடந்த 3-ம் தேதி 5 பேருந்துகளை, தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்த நிலையில்,  மீதமுள்ள 14 பேருந்துகளின் சேவையை இன்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். உதகை - ஈரோடு வழித்தடத்துக்கு 4 பேருந்துகளும், ஊட்டி - பெங்களூரு வழித்தடத்துக்கு 3 பேருந்துகளும், கூடலூர் - ஈரோடு வழித்தடத்துக்கு 3 பேருந்துகளும், ஊட்டி- திருப்பூர் வழித்தடத்துக்கு 2 பேருந்துகளும், கோத்தகிரி - ஈரோடு மற்றும் ஊட்டி- கோயமுத்தூர் வழித்தடத்துக்கு தலா 1 பேருந்தும், மேட்டுப்பாளையம் - ஊட்டி - மைசூர் வழித்தடத்துக்கு 2 பேருந்துகளும் மற்றும் கோத்தகிரி - ஊட்டி - மைசூர் வழித்தடத்துக்கு 2 பேருந்துகள் என 19 பேருந்துகளின் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் மனோகரன் கூறுகையில், ``தற்பாேது பயன்பாட்டுக்கு வந்துள்ள 19 பேருந்துகளும், இதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பேருந்துகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சமவெளிப் பகுதிகளுக்கான பேருந்துகள். எனவே, இவை அனைத்தும் சமவெளிப் பகுதிகளுக்குதான் இயக்கப்படும். இதனால் உள்ளூர் மக்களுக்குப் பெரிய அளவில் பயன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நீலகிரி மாவட்டத்தில் தற்பாேது உள்ளூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலானவை ஓட்டை உடைசலாக இருக்கின்றன. இதற்குப் பதிலாக உள்ளூர் வழித்தடங்களுக்குப் புதிய பேருந்துகளைப் பயன்பாட்டுக்கு வழங்கி இருக்கலாம்.  குறிப்பாக 450 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நீலகிரி மாவட்டத்தில் தற்பாேது 349 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் மக்கள் தாெகை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 40,000 பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பேருந்துகள் எண்ணிக்கை மட்டும் குறைக்கப்பட்டு வருகிறது. எனவே, உள்ளூர் வழித்தடங்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!