வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (06/07/2018)

கடைசி தொடர்பு:18:05 (07/07/2018)

துக்கத்துக்குச் சென்ற 2 பேருக்கு நேர்ந்த துயரம்! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

மினி லாரியில் துக்கத்துக்குச் சென்ற 20-க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

விருத்தாசலம்

விழுப்புரம் மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் மாவட்டம் தொண்டாங்குறிச்சி
கிராமத்தில் இறந்தவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். மினி லாரி வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமம் அருகில்
வந்தபோது பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில்  மினி லாரியில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் செல்வராணி என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகம்மாள் (31) மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லும் வழியில் உயிழந்தார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.