வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:11 (07/07/2018)

`குணசிங்கம் - விவசாயி!’ - கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டிரெய்லர்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியிருக்கிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சயீஷா நடிக்கிறார். படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, அர்த்தனா பினு, மௌனிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

கடைக்குட்டி சிங்கம்

டி.இமான் இசையமைக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படம் விவசாயம், கிராமத்து வாழ்வியல் பேசும் படமாக வெளிவர இருக்கிறது. இதில் கார்த்தி, விவசாயியாக நடிக்கிறார். ரேக்ளா ரேஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தப் படம் தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.