`செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு’ - சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்

செங்கல்பட்டில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பீதி

செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மாலை 6 மணி அளவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதேபோல சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்த பொதுமக்கள் நில அதிர்வால் பீதி அடைந்தனர். சில நொடிகளே உணரப்பட்ட இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதே போல எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியது. மகேந்திரா வேர்ல்ட் சிட்டியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கடந்த 15 நாள்களாக ராணுவ பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பயிற்சியின் காரணமாகத்தான் நில அதிர்வு ஏற்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!