பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை, பூடான் பிரதமர் டெல்லியில் சந்தித்துப் பேசினார். 

மோடி


இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 50 வருடங்கள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் விதமாகப் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவை இந்தியா வருமாறு நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் பூடான் பிரதமர். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பூடான் பிரதமரை, நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே நேற்று சந்தித்துப் பேசியிருந்தார். மோடி - டோப்கே ஆகியோரின் பேச்சுவார்த்தையின்போது, கடந்த ஆண்டு 73 நாள்கள் இந்தியா - சீனா ராணுவம் இடையே டோக்லாம் பீடபூமி பகுதியில் பிரச்னை நிலவிய விவகாரம் பற்றியும் இருவரும் ஆலோசித்து இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. நேற்று இந்தியா வந்த அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாளை நாடு திரும்ப உள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!