பும்ரா இடத்தை நிரப்புவாரா ஷர்துல் தாக்கூர்?

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பும்ரா

விராட் கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. தற்போது காயம் காரணமாக ஒருநாள் போட்டித் தொடரிலும்  விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்குப் பதிலாக ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் ஒரு டி20 போட்டியில் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய பும்ரா இரண்டு ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெத் ஓவர்களில் கலக்குபவர் இந்திய அணியில் விளையாடாதது, அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!