`பெயரளவுக்கு நடத்தப்படும் கருத்து கேட்புக் கூட்டம்!’- கொதிக்கும் சேலம் மக்கள் | salem people staged protest in meeting organised for seeking public opinion

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:51 (07/07/2018)

`பெயரளவுக்கு நடத்தப்படும் கருத்து கேட்புக் கூட்டம்!’- கொதிக்கும் சேலம் மக்கள்

கருத்துக் கேட்புக் கூட்டம்

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட 4 கிராம விவசாயிகளுக்கு அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் டி.ஆர்.ஓ., சுகுமார் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு  வந்திருந்த விவசாயிகள் கறுப்புப் பேட்ஜ் அணிந்துகொண்டு மண்டபத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, புகார் மனுக்களை கொடுத்துவிட்டு வெளியேறினார்கள்.

சேலத்தில் 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான நான்காம் கட்ட பணியாக இன்று (6.7.2018) மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. முதல் நாளில் மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, வெள்ளியம்பட்டி, ராமலிங்கபுரம் ஆகிய 4 கிராம மக்களுக்கு ஏற்கெனவே அழைப்பாணை கொடுக்கப்பட்டது. அதையடுத்து இன்று 4 கிராம மக்கள் குடும்பத்தோடு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தார்கள்.
மண்டபத்துக்கு வெளியே அ.தி.மு.கவைச் சேர்ந்த மெடிக்கல் ராஜா என்பவர் பாதிக்கப்பட்ட மக்களை ஒருமையில் பேசியதால், அவரைச் சூழ்ந்துகொண்ட சிலர் அடிக்கப் பாய்ந்தார்கள். உடனே, காவல்துறையினர் தடுத்து மெடிக்கல் ராஜாவை அப்புறப்படுத்தினார்கள்.  

கருத்துக் கேட்புக் கூட்டம்

கருத்து கேட்பு கூட்டத்துக்கு வந்திருந்த சிவகாமி கூறுகையில், ``நான் இராமலிங்கபுரத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். என் கணவர் கூலி வேலை செய்கிறார். நாங்கள் உழைத்து எங்க குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். 8 வழிச் சாலையால் எங்க வீடு பறிபோகிறது. பல முறை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுத்தும் எந்த பிரையோஜனமும் இல்லை.

இந்தக் கருத்து கேட்பு கூட்டத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என எங்க ஊரைச் சேர்ந்த எல்லோரும் வந்திருந்தோம். மண்டபத்துக்குள் போனதும் அதிகாரிகள், ``நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015-ன் அடிப்படையில் மக்களின் பயன்பாட்டுக்காக  8 வழிச் சாலைக்கு உங்கள் நிலங்களை கையகப்படுத்த உள்ளோம். அதற்கு அதிகப்படியான இழப்பீடும் கொடுக்கப்பட இருக்கிறது.  இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்பேசனை இந்தால்  மனு எழுதி தனித்தனியே கொடுங்கள்'' என்றார்கள். மண்டபத்துக்குள் 2 மணி நேரம் காத்திருந்தோம். அதிகாரியும் கண்டுக்கொள்ளவே இல்லை. இறுதியாக நாங்கள் மண்டபத்துக்குள்ளே உள்ளிருப்புப் போராட்டம் செய்துவிட்டு வந்து விட்டோம். பேருக்கான கூட்டமாகத்தான் கருத்து கேட்பு கூட்டம் இருந்தது'' என்றார்.


[X] Close

[X] Close