வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:49 (07/07/2018)

`ஊதியம் வழங்குவதை உறுதி செய்க!’ - போராட்டத்தில் நியாய விலைக் கடை ஊழியர்கள்

பொது விநியோகத்திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டம்

பொது விநியோகத்  திட்டம் சீர்குலைக்கப்படுகிறது, ரேசன் கடை ஊழியர்களுக்கு  மாத மாதம்  ஊதியம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்,  என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ, எல்.பி.எப். எம்.எல்.எப்.  அமைப்புகளை சேர்ந்த நியாய விலைக்கடை ஊழியர்கள் மதுரை பேச்சியம்மன்  படித்துறையில் ஆர்பாட்டம்   நடத்தினார்கள். தமிழக  ரேசன் கடை ஊழியர்களின் பிரச்னைகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க தொழிலாளர் முன்னணி இணைப்பொதுச்செயலாளர் மகபூப்ஜான், ''உணவு பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் பொதுவிநியோகத் திட்டம் சீர்குலைக்கப்படுகிறது. பொதுவிநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். ரேசன் கடை ஊழியர்களுக்கு  மாதமாதம்  ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை, ரேசன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். இதை வவியுறுத்தி தமிழகம் முழுவதும் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது'' என்றார். இதில் ஏராளமான ரேசன் கடை தொழிலாளர்கள்  கலந்து கொண்டனர்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க