கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை - காங்கிரஸ் காமெடி உண்ணாவிரதம்

நாகர்கோவில்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் நாகர்கோவிலில் உண்ணாவிரதம் உட்கார்ந்திருக்கிறார்கள். இலங்கை பிரச்னைக்காக தானே என்று தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்; இது வேறு கணக்கு!
 

குளச்சல் துறைமுக பணியை விரைந்து முடிக்க வேண்டும், பேச்சிப்பாறை அணையை தூர்வாரி மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும், நாகர்கோவில் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஒருநாள் உண்ணவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 

இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், குளச்சல் சட்டமன்ற உறுப்பினருமான பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ஜான் ஜேக்கப், காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மிஸ்ஸிங். அவரை முறையாக அழைக்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.
 

இலங்கை விவகாரத்தில் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கையில், கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை கதையாக‌ தமிழக காங்கிரஸுக்கு இப்போது இந்தப் போராட்டம் தேவைதானா?

என்.சுவாமிநாதன்

படங்கள்:
ரா.ராம்குமார்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!