``ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பயிற்சி..!'' தமிழக அரசு ஏற்பாடு | Entrepreneurship Development and Innovation Institute (EDII) - Programme on Export Import Procedures and Documentation

வெளியிடப்பட்ட நேரம்: 05:36 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:36 (07/07/2018)

``ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பயிற்சி..!'' தமிழக அரசு ஏற்பாடு

ஏற்றுமதி இறக்குமதி


தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டத்திட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சியை வரும் ஜூலை மாதம் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில்  நடத்த உள்ளது. உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், பொருளைப் பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்றவை பயிற்றுவிக்கப்படும். 

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளைப் பெறும் முறைகளைப் பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இப்பயிற்சி நடக்கும் இடம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை  044-22252081, 22252082, 8825416460, 8668102600 என்ற எண்கள் மூலம்  தொடர்பு கொள்ளலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க