வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:26 (07/07/2018)

நாகர்கோவிலில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த இரண்டு பேர் கைது!

நாகர்கோவிலில் போலி வாக்காளர் அட்டை தயாரித்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது

ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் பெயர் திருத்தம், புதிய கார்டு அச்சடித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தனியார் இன்டர்நெட் சேவை மையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. தனியார் இன்டர்நெட் சென்டர்கள் ஆதார் அட்டையில் வேண்டுமென்றே குழறுபடி செய்தன. இதையடுத்து ஆதார் அட்டையில் பிழைதிருத்தம் செய்யும் அதிகாரம் தனியார் இன்டர்நெட் சென்டர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. இருப்பினும் வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு போன்றவற்றில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ள தனியார் மையங்கள் உதவியாக இருந்தன. இந்த நிலையில், நாகர்கோவில் கோட்டாரில் போலி ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சடித்துக் கொடுப்பதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர் சாதாரண நபரைப்போன்று  கோட்டார் கம்ப்யூட்டர் சென்டருக்குச் சென்று போலி வாக்காளர் அடையாள அட்டை கேட்டிருக்கிறார்.

கைது

அவர்களும் 150 ரூபாய் வாங்கிக்கொண்டு போலி வாக்காளர் அடையாள அட்டை வழங்கியிருக்கிறார்கள். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அந்தக் கம்ப்யூட்டர் சென்டரில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு போலி வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து போலி அட்டைகள் தயாரித்ததாக செந்தில்குமார் (51), சுபாஷ் (23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அச்சடித்து விநியோகிக்கப்பட்ட போலி அடையாள அட்டைகள் குறித்தும், அவற்றை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.