'சவுகாச் ஆபரேஷன்' - கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் நவீன படகில் ரோந்து! | patrol in the new boat in the kanyakumari sea

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:25 (07/07/2018)

'சவுகாச் ஆபரேஷன்' - கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் நவீன படகில் ரோந்து!

டல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும்விதமாக ’சவுகாச் ஆபரேஷன்’ என்ற பெயரில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் அதிநவீன படகுகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

 நவீன படகில் ரோந்து

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் விதமாக ’சஜாக்’ மற்றும் ’சவுகாச் ஆபரஷேன்’ போன்ற பெயர்களில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை அடிக்கடி நடத்துவது வழக்கம். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் 4 நாள் ’சவுகாச் ஆபரேஷன்’ நடத்திவருகின்றனர். இதையடுத்து, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் கடல்வழி கண்காணிப்புப் பணியை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆரோக்கியபுரத்தில் இருந்து நீரோடி வரையிலான கடற்கரைக் கிராமங்களில் 4 அதிநவீனப் படகுகளில் போலீஸார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ரோந்து

கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் நடக்கும் இந்த ரோந்துப்பணியின்போது சந்தேகத்துக்கு இடமாக தென்படும் விசைப்படகுகள், பைபர் படகு, நாட்டுப்படகுகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும், சந்தேகத்துக்கு இடமாக தென்படும் படகுகள், வேற்று நபர்கள் குறித்து உடனடியாகத் தகவல் வழங்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


[X] Close

[X] Close