வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:21 (07/07/2018)

கோழிப்பண்ணை அதிபரை வெட்டிக் கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை!

கோழிப்பண்ணை அதிபரைக் கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோழிப்பண்ணை அதிபரை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அனீஸ்

கன்னியாகுமரி  மாவட்டம் வடக்கு நுள்ளிவிளையில் கோழிப்பண்ணை வைத்திருந்தவர் மிக்கேல் (42). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அனீஸ் (27) என்பவருக்கும் ஏற்கெனவே நடந்த மோதலில் மிக்கேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி அனீஸ் ஜாமீனில் வெளிவந்தார். அன்று அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதற்கு மிக்கேல்தான் காரணம் என அனீஸ் நினைத்திருக்கிறார். இதையடுத்து, தனது நண்பர்கள் சதீஷ், கார்த்திக் ஆகியோருடன் சென்ற அனீஸ் பைக்கில் சென்ற மிக்கேலை வழிமறித்து  அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து அனீஸ், சதீஷ், கார்த்திக் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனீசுக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும் விதித்தார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சதீஷ், கார்த்தி ஆகியோரை விடுதலை செய்தும் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க