வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (07/07/2018)

கடைசி தொடர்பு:17:20 (07/07/2018)

தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய மகன் - குடியால் எடுத்த தற்கொலை முடிவு 

 தற்கொலை

சென்னை விருகம்பாக்கத்தில் தாயின் சேலையில் தூக்குப்போட்டு மகன் தற்கொலை செய்துகொண்டார். 

சென்னை விருகம்பாக்கம், சண்முகசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கலட்சுமி. இவரின் கணவர் இறந்துவிட்டார். இதனால் வீட்டு வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். மாணிக்கலட்சுமிக்கு இரண்டு மகன்கள். இருவரும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்.  மூத்த மகன், சினிமா துறையில் மேக்அப் மேனாக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்துவேறுபாடு காரணமாக மனைவி ஆந்திராவில் வசித்துவருகிறார்.

இந்தநிலையில், இரண்டாவது மகன் வீரபாபுவை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். சம்பவத்தன்று, வீட்டுக்கு வந்த வீரபாபு, தாயின் சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வீரபாபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரபாபு, வேலைக்கு எங்கும் செல்லவில்லை. இதனால் மனஅழுத்தத்தில் அவர் இருந்துள்ளார். குடிப்பழக்கத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தாயை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.