வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (07/07/2018)

கடைசி தொடர்பு:18:32 (07/07/2018)

`இனி ஆண்டுக்கு 2 முறை நீட், ஜே.இ.இ தேர்வுகள்!' - பிரகாஷ் ஜவடேகர் 

'நீட், ஜே.இ.இ ஆகிய தேசிய நுழைவுத் தேர்வுகள், வரும் 2019-ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்' என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர் 

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,``மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நடத்தாது. நீட், ஜே.இ.இ, யு.ஜி.சி நெட் மற்றும் சிமேட் போன்ற தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமை( National Testing Agency) என்ற அமைப்பு எடுத்து நடத்தும். அனைத்து நுழைவுத்தேர்வுகளும் கணினி முறையில்(computer-based) நடத்தப்படும். ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகள், இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். ஜே.இ.இ மெயின் தேர்வு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நீட் தேர்வு, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடைபெறும். நுழைவுத் தேர்வுகள் வெளிப்படையாக நடக்கும். அதோடு, பாதுகாப்பாகவும் நடத்தப்படும். நீட், ஜே.இ.இ தேர்வுகள் தேதி முடிவுசெய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்'' என்றார்.