எய்ம்ஸ் மருத்துவமனையை 2003-ம் ஆண்டிலேயே ஏன் கொண்டுவரவில்லை? - செல்லூர் ராஜு கேள்வி

''எய்ம்ஸ் மருத்துவமனையை 2003-ம் ஆண்டிலேயே மத்திய அரசு அறிவித்ததாக சிலர் கூறுகின்றனர். அப்படி என்றால், 15 ஆண்டுகளாக ஏன் கொண்டுவரவில்லை'' என்று அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 5 -ம் தேதி,  மதுரையில் பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் எய்ம்ஸ் வந்ததற்கு பா.ஜ.க-தான் காரணம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே தமிழகத்துக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது என்று பேசினார்கள்.

எய்ம்ஸ்

அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, இன்று மதுரையில் நடந்த அரசு விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ''மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான், மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுத்தார். அதனாலேயே அப்போது தோப்பூர் தேர்வு செய்யப்பட்டது. அதில், எங்களுக்குப் பெருமை. கடந்த 2003-ம் ஆண்டிலேயே மத்திய அரசு தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்ததாகச் சிலர் கூறுகின்றனர். அப்படி என்றால், 15 ஆண்டுகளாக ஏன் கொண்டுவரவில்லை? தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க, தாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று சொல்லலாம், அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதேநேரம், முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரும் அழுத்தம் கொடுத்து  அறிவிக்கவைத்தனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது'' என்று பேசினார். 
  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!