மகளை திருமணம் செய்ய வற்புறுத்திய உறவினர் - வெட்டிக் கொலை செய்த மகன், தந்தை கைது! | Two people arrested for killing a relative

வெளியிடப்பட்ட நேரம்: 02:32 (08/07/2018)

கடைசி தொடர்பு:02:52 (08/07/2018)

மகளை திருமணம் செய்ய வற்புறுத்திய உறவினர் - வெட்டிக் கொலை செய்த மகன், தந்தை கைது!

ன்னியாகுமரி அருகே மகளை திருமணம் செய்ய வற்புறுத்திய உறவினரை வெட்டிக்கொலை செய்த மகன் மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் திருமலை நம்பி (45). தொழிலாளியான இவர் கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அந்தசமயம் திருமலைநம்பியின் உறவினர் செம்புகுட்டி(55), அவரது மகன் சுயம்புலிங்கம்(26) ஆகியோர் அங்குவந்துள்ளனர். அவர்களுக்கும் திருமலை நம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. செம்புகுட்டியும், சுயம்புலிங்கமும் சேர்ந்து திருமலைநம்பியை அரிவாளால் வெட்டினர். திருமலைநம்பி அந்த இடத்திலே பரிதாபமாக இறந்தார். பின்னர் செம்புகுட்டியும், அவரது மகனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீஸார் துரிதமாக செயல்பட்டு செம்புகுட்டியை கைது செய்தனர். சுயம்புலிங்கம் கோர்ட்டில் சரணடைந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் திருமலை நம்பி தனது மகளை சுயம்புலிங்கத்திற்கு திருமணம் செய்து வைக்கும்படி கட்டாயப்படுத்தி வந்ததாகவும், இது தொடர்பாக சுயம்புலிங்கத்தை திருமலை நம்பி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து தட்டிக்  கேட்கச்சென்றபோது ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்யததாக விசாரணையில் தெரியவருகிறது.