தன் கார் மீதே பெட்ரோல் குண்டு வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர்!

போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள்  மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குண்டு


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் புங்கமேடு பகுதியை சேர்ந்தவர் காளிகுமார்.  2016ம் ஆண்டு முதல் இந்து  மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். அப்போது அவர் வீட்டில்  இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து  அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்திருந்தனர். ஆனால் பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரை காளிகுமார் ஆபாசமாக திட்டியதால் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையே, போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வந்த குமார் மீண்டும் எப்படியாவது போலீஸ் பாதுகாப்பு வாங்க வேண்டும் என்று நினைத்து தன் கார் மீது தன் அண்ணன் மகன் மூலம் பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டு மர்ம நபர்கள் தன் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டார்கள் என்று நாடகமாடினர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி விசாரணை நடத்தினார். அப்போது உண்மையை காளி குமார் அண்ணன் மகன் ரஞ்சித் மூலம் தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டதை ஒப்புக் கொண்டார்.  இதையடுத்து காளி குமார், ஞானசேகரன் , ரஞ்சித் ஆகியோர் மூவர் மீதும் சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!