280 குழந்தைகள் குறித்த ஆவணங்கள் இல்லை  -தொடரும் காப்பக சர்ச்சை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அன்னை தெரசா காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில், இரண்டு கன்னியாஸ்திரிகள்  கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் தொடரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

குழந்தைகள் 

ஜார்க்கண்டில் இயங்கி வரும் அன்னை தெரசா காப்பகம் திருமணம் ஆகாமல் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்தும், அவர்களின் குழந்தைகளை பாதுகாக்கவும் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு தம்பதி குழந்தையைத் தத்தெடுக்க அங்கிருக்கும் சிலர் ரூ . 40,000 முதல்  1 லட்சம் ரூபாய் வரை பெறுவதாக புகார் அளித்தனர் . இது தொடர்பான விசாரணையில் இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர் . 

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருக்கும் பல்வேறு காப்பகங்களில் 2015 முதல்  2018 வரையிலான காலகட்டத்தில்  450 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், அவற்றில்  170 குழந்தைகளின் பிறப்பு தொடர்பான தகவல்கள் மட்டுமே இருப்பதாகவும் மீதம் உள்ள  280 குழந்தைகள் தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.  

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!