தொடரும் வருமானவரிச் சோதனை - சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் கிறிஸ்டி நிறுவன ஊழியர்கள்!

கிறிஸ்டி  நிறுவனத்தில் சோதனை

தமிழக அரசின்  சமூக நலத்துறை மூலம் சத்துணவு திட்டத்திற்காகக் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துமாவு, முட்டையும், ரேஷன் கடைகளுக்கு  அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களும் விநியோகித்து வருவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிறிஸ்டி ஃபிரைட் கிராம்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி. இவர் திருச்செங்கோடு, இராசிபுரம், கோவை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உட்பட இந்தியா முழுவதும் 75 -க்கும்  மேற்பட்ட நிறுவனங்க உள்ளன. பல பெயர்களில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வருமான ஏய்ப்பு செய்ததோடு பல முறைகேட்டில் ஈட்டுப்பட்டுள்ளனர் என்று மத்திய வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் கடந்த 5 -ம் தேதியில் இருந்து மும்பை, மற்றும் கேரளாவைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் குமாரசாமி வீடு, அலுவலகம், கிறிஸ்டி நிறுவனம் அதன் துணை நிறுவனங்கள், ஆடிட்டர் வீடு, அலுவலகங்கள் மற்றும்  நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் சுதாதேவி வீடு, அலுவலகம் உட்பட 76 க்கும் மேற்பட்ட இடத்தில் தொடர்ந்து 4 -வது நாளாகச் சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்த போது, ''இந்த நிறுவனத்தில் மெஷின், பேக்கிங், மின்சாரம், ஐ.எஸ்.ஓ., லேப், கேன்டீன் உட்படப் பல துறைகள்  இருக்கிறது. 24 மணி நேரமும், 3 ஷிப்ட்டாக பணியாற்றுகிறோம்.  ஒரு ஷிப்ட்-க்கு குறைந்தது 2,000 பேர் வீதம் மொத்தம் 6,000 பேருக்கு மேல் பணியாற்றுகிறோம். எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சம்பளம் போடுவார்கள். தற்போது வருமான வரித்துறை ரெய்டு நடப்பதால்  இன்னும் சம்பளம் கிடைக்கவில்லை. உள்ளே நடப்பது பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் உள்ளே  செக்‌ஷனில் வேலை பார்க்கும் ஓ.ஏ.,ஆட்களை அடிப்பதாகவும். அடி தாங்க முடியாமல் தான் கார்த்திகேயன் குதித்ததாகவும் சொன்னார்கள்'' என்று புலம்புகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!