வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (08/07/2018)

கடைசி தொடர்பு:15:20 (08/07/2018)

`விஜயகாந்த் பூரண நலம் அடைய வேண்டுகிறேன்...' - தமிழிசை சௌந்தரராஜன்

மேல் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த். அவர், `பூரண நலம் அடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும்' என தமிழிசை சௌந்தரராஜன் ட்விட் செய்துள்ளார். 

விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின்  குரல் வளம் பாதிக்கப்பட்டு கட்சி பொதுக் கூட்டங்களில் பேசுவதைத் தவிர்த்து வருகிறார். தொடர்ந்து அவரது உடல்நிலை சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரால் அரசியலில் முழுவீச்சில் ஈடுபட முடியவில்லை எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், தற்போது மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளக் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து, மனைவி பிரேமலதாவுடன் இன்று அதிகாலை 1 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். 

தமிழிசை சௌந்தரராஜன்

இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், `தே.மு.தி.க தலைவர் உடல்நலம் பேண சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக செய்திகள் சொல்வதால் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் அடைந்து மக்கள் பணியாற்ற திரும்ப இறைவனை தமிழக பாஜக சார்பில் வேண்டுகிறேன்' என எனப் பதிவிட்டுள்ளார்.