முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம், நகை கொள்ளை!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப.சிதம்பரம்

 காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. நேற்றிரவு அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூபாய் 1.10 லட்சம் பணம், மற்றும் தங்க நகைகள், வைரம் உள்ளிட்டவற்றை  திருடிச்சென்றுள்ளனர். அவரது வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்ததாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பந்தமாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த வீட்டில் வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் எடுத்திருக்கலாம் என போலீஸார் கணித்ததையடுத்து அந்த பெண்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் வீட்டுக்கு காவலர்கள் இருந்தும் அவர்களை மீறி இந்த கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டிலே கொள்ளை நடைபெற்ற சம்பவம் அப்பகுதிவாசிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.    ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!