குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் - அரசாணை வெளியீடு!

குடிமராமத்துப் பணிகளைக் கண்காணிக்க 7  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை


பருவ மழை பெய்யும் காலங்களில், மழைப்பொழிவு அதிகரிப்பதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி கரைகளில் உடைப்பு ஏற்பட்டு நகரங்களில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீர்நிலைகளை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு, குடிமராமத்துப் பணி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் உள்ள குளங்கள், நீர்நிலைகள், பாசனக்கால்வாய்கள் ஆகியவற்றைத் தூர்வாரி அதன் கரைகளை பலப்படுத்துவதே குடிமராமத்துப்பணி திட்டம்.

 

அரசாணை

 

இந்த திட்டம்  அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு சார்பில் கடந்த 2016-17 ம் ஆண்டிலிருந்து இந்த திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டில் இந்த திட்டத்திற்கு ரூ.328 கோடி நிதி ஒதுக்கி, 1,511 குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளைக் கண்காணிக்க, ககன்தீப் சிங் பேடி, அமுதா, பங்கஜ்குமார் பன்சால், ராஜேந்திர ரத்னூ, ஆசிஷ் வச்சானி, தாரிஸ் அகமது, கோபால், ஆகிய 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!