ரயிலில் அனாதையாகக் கிடந்த 13 கிலோ கஞ்சா- விசாரணையில் இறங்கிய நாகர்கோவில் போலீஸ்

நாகர்கோவிலுக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலுக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா

ஹவுராவிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் குருதேவ் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் சந்தேகத்துக்கிடமாக 2 பைகள் அனாதையாகக் கிடந்தன. ரயில்வே ஊழியர்கள் அதைப் பார்த்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் விரைந்துசென்று சந்தேகத்துக்கிடமான பார்சல்களைச் சோதனை செய்தனர். இரண்டு பைகளிலும் தலா 3 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 13 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய போலீஸார் அதன் மதிப்பு ரூ. 2.50 லட்சம் என தெரிவித்தனர். வட மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் போலீஸுக்குப் பயந்து விட்டுச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!