இந்திய அரசால் தேடப்படும் மதபோதகர் ஜாகீர் நாயக், மலேசிய பிரதமருடன் சந்திப்பு!

இந்திய அரசால் தேடப்பட்டுவரும் மதபோதகர் ஜாகீர் நாயக், மலேசிய பிரதமர் மஹதீர் முகம்மதை சந்தித்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் மீது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் அளித்தல் ஆகிய குற்றசாட்டுகள் எழுந்தன. அதனையடுத்து, இந்திய புலனாய்வு அமைப்பு அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. 2016-ம் ஆண்டு, ஜாகீர் நாயக், மலேசியாவுக்குத் தப்பிச் சென்றார். மலேசியாவில், அவர் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புமாறு இந்திய அரசால் கோரிக்கைவைக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், 'ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடியாது. அவரால், மலேசியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்று மலேசிய பிரதமர் மஹதீர் முகம்மது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜாகீர் நாயக், மலேசிய பிரதமர் மஹதீர் முகம்மதுவை சனிக்கிழமை சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!