வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (09/07/2018)

கடைசி தொடர்பு:07:20 (09/07/2018)

இன்றுடன் முடிவடைகிறது சட்டமன்றக் கூட்டத்தொடர்!

கூட்டத்தொடர்

மிழ்நாடு அரசின் பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதம் மே மாதம் 29-ம் தேதி முதல் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த வாரம் வியாழக்கிழமை சட்டப்பேரவை கூடியிருந்தது. மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடும் சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்களை முன்னெடுக்க ஆயத்தமாகியிருக்கிறது எதிர்க்கட்சிகள். இன்றைய விவாதத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் இந்தக் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

இன்று காலை 10 மணிக்கு அவை கூடியதும் துறைகள் மீதான விவாதங்களுக்கு துணை முதல்வரும், அமைச்சர் ஜெயக்குமாரும் பதிலளித்துப் பேசுவார்கள். இன்று லோக் ஆயுக்தா மசோதா ஒருமனதாக நிறைவேற இருக்கிறது. இதைப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். இன்றைய கூட்டத்தில் சத்துணவு முறைகேடு தொடர்பாக தி.மு.க பிரச்னை எழுப்பும் எனக் கூறப்படுகிறது. சத்துணவு முறைகேட்டில் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும், 8 வழிச்சாலை தொடர்பான போராட்டங்கள், அரசியல் பிரமுகர்கள் கைது தொடர்பாக இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.