ஆறுதல் கூறச்சென்ற இடத்தில் செல்ஃபி எடுத்து சர்ச்சைக்குள்ளான சுரேஷ்கோபி!

கல்லூரி மாணவர் சங்க நிர்வாகி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறச்சென்ற சுரேஷ்கோபி அங்கு கூடியிருந்த மக்களுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

ல்லூரி மாணவர் சங்க நிர்வாகி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறச்சென்ற சுரேஷ்கோபி அங்கு கூடியிருந்த மக்களுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

சுரேஷ்கோபி

கேரள மாநிலம் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவரும் எஸ்.எஃப்.ஐ மாவட்டக்குழு உறுப்பினருமாகிய அபிமன்யூ கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நடந்தது. இந்த வழக்கில் மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல்துறை கஷ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்ய ஆட்களை கல்லூரிக்கு அழைத்து வந்தவர்கள் குறித்தும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மலையாள நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ்கோபி வட்டவட பஞ்சாயத்து கொட்டக்கம்பூரில் உள்ள அபிமன்யூ வீட்டுக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்றார்.

ஆறுதல்

அபிமன்யூ-வின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர் போலீஸ் விசாரணை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்த அவரைக் காண அங்குள்ள மக்கள் திரண்டு வந்திருந்தனர். அந்த மக்கள் விரும்பியதால் அவர்களுடன் சுரேஷ்கோபி சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். துக்கம் விசாரிக்கச்சென்ற இடத்தில் செல்பி எடுத்த சுரேஷ்கோபியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். அவர் செல்ஃபி எடுத்த விவகாரம் குறித்த சர்ச்சை இதுவரை அடங்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!