`ரெய்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' - ஜெயக்குமார் விளக்கம்! | 'there is no link between egg company and goverment' - Jayakumar explained!

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:15:20 (12/07/2018)

`ரெய்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' - ஜெயக்குமார் விளக்கம்!

முட்டை நிறுனத்தில் நடைபெறும் வருமான வரிச் சோதனைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், `லோக் ஆயுக்தா தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும்  சட்டப்பேரவையில் பதில் கிடைக்கும்' என்றார். `விடிந்தால் அரசைத் தாக்கி பேசுவதையும், புழுதி வாரித்தூற்றுவதுமே டி.டி.வி தினகரன் வேலையாக வைத்துள்ளார். முட்டை நிறுவனத்தில் நடைபெறும் வருமான வரித்துறைச் சோதனைக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. சிலர் தேவையின்றி அரசுக்குத் தொடர்புள்ளதாக பரப்பி வருகின்றனர். அதில் உண்மையில்லை. வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தால் அவர்கள் ஆய்வு செய்யட்டும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்ப்பே இல்லை. பா.ஜ.க உடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும். அமித் ஷா வருகை அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கேள்விகளுக்கு 2024-ல் இந்த முறையை அமல்படுத்துவதே சரி என்று கூறியுள்ளோம்"  எனத் தெரிவித்தார்.


[X] Close

[X] Close