தகுதி நீக்க கோரும் வழக்கு - சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றம்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தனது அரசின்மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை  சட்டப்பேரவையில் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பேரவை

இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தி.மு.க கொறடா சக்கரபாணி. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், `தகுதி நீக்கம் கோரும் வழக்கில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் பதிலளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதேபோல சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் சபாநாயகர் தனபால் இதுதொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!