தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது!

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்செய்த லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை

சட்டப்பேரவை கூட்டத்தொடர்,  கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கி ஒருமாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இறுதி நாளான இன்று, சட்டமுன்வடிவுகள் தாக்கல்செய்யப்பட்டு சட்ட மசோதாவாக அமல்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, லோக் ஆயுக்தா மசோதாவை  அமல்படுத்துதற்கான நடவடிக்கைகுறித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது.

ஜெயகுமார்

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கும் தன்னிச்சையான அமைப்பே லோக் ஆயுக்தா. ஊழல் புகாரில் ஆளுநரின் அனுமதி பெறாமலே சம்பந்தப்பட்டவர்கள்மீது விசாரணை நடத்த, லோக் ஆயுக்தாவுக்கு அனுமதியுண்டு. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிப்பார். தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநருக்குப் பரிந்துரைசெய்ய தனியே குழு ஒன்று அமைக்கப்படும். இத்தகைய அம்சங்களை உள்ளடக்கிய சட்ட மசோதாவை மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது, தி.மு.க வெளிநடப்புசெய்தது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!