கேரள மாணவியரின் அன்பு மழையில் ஆசிரியர் பகவான்! | teacher Bhagavan felicitated by kerala students

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:14:40 (09/07/2018)

கேரள மாணவியரின் அன்பு மழையில் ஆசிரியர் பகவான்!

கேரள மாணவ மாணவியரின் அன்பு மழையில் நனைந்த திருவள்ளூர் ஆசிரியர் பகவான்

கேரள மாணவியரின் அன்பு மழையில் ஆசிரியர் பகவான்!

திருவள்ளூர் ஆசிரியர் பகவான் கோவிந்துக்கு கேரளாவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

ஆசிரியர் பகவான்

photo courtesy : mathrubhumi

நல்லாசிரியர்களுக்குள் நல்லாசிரியரான திருவள்ளூரைச் சேர்ந்த பகவான் இப்போது அகில இந்தியா முழுவதும் பாப்புலராகி விட்டார். பணி மாற்றத்துக்குள்ளான அவருக்காக மாணவ - மாணவிகள் போராட்டம் நடத்த, தற்போது அவரின் பணிமாற்ற உத்தரவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்கில ஆசிரியர் பகவான் குறித்து இந்தியா முழுவதும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இப்போது 'ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்' என்பது குறித்து உரை நிகழ்த்த அவருக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் அழைப்பு வரத் தொடங்கியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள எடமட்டம் பகுதியில் பள்ளி மாணவ- மாணவிகளிடத்தில் உரை நிகழ்த்த பகவானுக்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுச் சென்ற அவருக்கு மாணவ - மாணவிகள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். பெற்றோரும் மாணவ -மாணவிகளும் பகவானுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

நிகழ்ச்சியில் மாணவ -மாணவிகளின் கேள்விகளுக்கு ஆசிரியர் பகவான் பதில் அளித்தார். அவர்களிடத்தில் உரை நிகழ்த்திய பகவான், 'ஆசிரியர்களும் மாணவர்களும் தோழமையுடன் பழக வேண்டும். பாடப்புத்தகத்தைத் தாண்டி மாணவ- மாணவியரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் ஆசானாக இருக்க வேண்டும். நான் பணியாற்றிய பள்ளியில் படித்து வரும் மாணவியரின் பெற்றோர் என்னை மூத்த மகனாகப் பார்த்தனர். என்னை அதிக பொறுப்பு உணர்வு கொண்டவனாக இது மாற்றியது. விளையாட்டு போன்ற விஷயங்களிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். இந்த மாதிரி நேரங்களில்தான் மாணவர்கள் தங்கள் கனவுகளை ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். இன்று நல்லாசிரியராக அடையாளம் காணப்பட்டுள்ளேன் என்றால் எனக்கு கிடைத்த ஆசான்களே காரணம்'' என்று பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க