வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (09/07/2018)

கடைசி தொடர்பு:17:17 (09/07/2018)

`தமிழகத்தில் ஆர்டர்லி முறை ரத்து'- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழகத்தில் ஆர்டர்லி முறை நடைமுறையில் இல்லை எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு இருப்பிட உதவியாளர்கள் 86 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் தமிழக முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

முதல்வர்

சட்டப்பேரவையின் இறுதிநாளான இன்று பொதுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், `தமிழகத்தில் செயின் பறிப்பு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் இருக்கிறது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்படுவதாக கூறும் தமிழக அரசு, வேலைக்காரர்களைவிட கேவலமாக நடத்தப்பட்டு வருவதாக' பேசினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குற்றங்களைத் தடுக்க முடியாது. குற்றங்களைக் குறைக்க மட்டுமே முடியும்' எனப் பேசினார். 'தி.மு.க ஆட்சிக்காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் குறைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையில் ஆர்டர்லி முறை நடைமுறையில் இல்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு இருப்பிட உதவியாளர் 86 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்' என முதல்வர் பேரவையில் விளக்கமளித்தார்.