வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (09/07/2018)

கடைசி தொடர்பு:14:53 (09/07/2018)

'பெஸ்ட் பிக்சர்' பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இலங்கை திரைப்படம்!  

இலங்கை சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 'தி ஃபிரோஸேன் ஃபயர்' (The Frozen Fire) எனும் முழுநீளத் திரைப்படம் 'பெஸ்ட் பிக்சர்' கேட்டகிரியில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு இலங்கை திரைப்படங்கள் 'பெஸ்ட் ஃபாரின் லாங்குவேஜ் மூவி' எனும் கேட்டகிரியில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. உலகளாவிய சிறந்த திரைப்பட கேட்டகிரியில் இலங்கை படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதுவே முதன் முறை. இதை அனுராதா ஜெயசிங்கே இயக்கியுள்ளார்.  

The Frozen Fire -திரைப்படம்

India based All Lights Film Services எனும் நிறுவனம்தான் இந்தியத் திரைப்படங்களை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யும் செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் இதுவரை 14-க்கும் மேற்பட்ட படங்களை பரிந்துரை செய்துள்ளது. 'பாலேட் ஆஃப் ரஸ்தம்', 'காமசூத்ரா 3டி', 'புலிமுருகன்', 'டாம் 999', 'கலர் ஆஃப் ஸ்கை' போன்ற படங்கள் இவர்கள் பரிந்துரை செய்ததில் குறிப்பிடத்தக்கவை.   

இப்படத்தின் முதல் காட்சி நேஷனல் ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆஃப் இலங்கையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று திரையிடப்பட்டது. இந்த ஆண்டு இப்படம் ஆஸ்கார் விருதை வெல்லும் என்று பரவலான விமர்சனங்கள் இப்படத்தின் மீது வைக்கப்பட்டு வருகிறது.