`தமிழகத்தில் முழு கருத்து சுதந்திரம் உள்ளது'- முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் முழு கருத்து சுதந்திரம் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர்  பழனிசாமி

சட்டப்பேரவை இறுதிநாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், `சேலம் டு சென்னை 8 வழிச்சாலை குறித்து அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க மறுப்பது ஏன்? பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து அரசியல் கட்சியினரும், மக்களும் கருத்து சொல்லக்கூடாது என்பதுபோல் காவல்துறை செயல்பட்டு வருகிறது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்' என்று தெரிவித்தார்.

ஸ்டாலின்

இதற்குப் பதிலளித்த முதல்வர், `சிலர் வேண்டுமென்றே சேலம் டு சென்னை பசுமை வழிச்சாலையை எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் கருத்து சொல்ல அனைவருக்கும் முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலே அதிக போராட்டங்கள் நடப்பது தமிழகத்தில்தான். அதற்கான பாதுகாப்பை தமிழக அரசு கொடுத்துள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தால் விபத்துகள் குறையும்; எரிபொருள் செலவும் குறையும். எதிர்காலத்தில் பெருகும் வாகன பயன்பாட்டுக்கு தகுந்தாற்போல் சாலையை விரிவாக்கம் செய்வது அரசின் கடமை. இந்தத் திட்டத்தால் ஒரு விவசாயியின் நிலம் முழுமையாக எடுக்கப்படும் நிலை வந்தால் அவருக்கு பசுமை வீடு கட்டித்தரப்படும்' என அவர் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!