கிராமியக் கலைஞர்கள் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்!

 

நூதன ஆர்ப்பாட்டம் நடத்திய கிராமிய கலைஞர்கள்

நலிந்துவரும் கிராமியக் கலையை தமிழக அரசு  காப்பாற்ற வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தம் பகுதியில் கிராமியக் கலைஞர்கள் ஆட்டம் ஆடி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசின் கலைஞர்கள்  நல வாரியத்தால் தங்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை, வேலையில்லாக் காலங்களில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும், ஓய்வூதிய வயதை ஆண்களுக்கு 50 ஆகவும், பெண்களுக்கு 45 ஆகவும் குறைக்க வேண்டும், ஓய்வூதியத்தை அரசு 4500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், கிராமியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியை இரவு 10 மணி முதல் 2 மணி வரை நடத்த  அனுமதி வழங்க வேண்டும், உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து கிராமியக் கலைஞர்கள் கூட்டமைப்பு வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், மதுரையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கரகாட்டம், சிலம்பாட்டம் , ஒயிலாட்டம் ஆடி,  நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். `கிராமியக் கலைகளையும் , கலைஞர்களையும் காப்பாற்ற வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!