டார்ஜிலிங்கில் இருந்து நாளை சென்னைக்குத் திரும்புகிறார், ரஜினி | Rajini will return chennai from Darjeeling tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (09/07/2018)

கடைசி தொடர்பு:18:30 (09/07/2018)

டார்ஜிலிங்கில் இருந்து நாளை சென்னைக்குத் திரும்புகிறார், ரஜினி

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்ற ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினி, நாளை சென்னை திரும்புகிறார்.  

ரஜினி

கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி, 'காலா' திரைப்படம் ரிலீஸானது. அதற்கு முதல்நாள், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டார்ஜிலிங் சென்றார் ரஜினி. 'கபாலி' படத்துக்காக மலேசியாவில் இரண்டு மாதங்கள் தங்கிய அவர், அதன் பிறகு 35 நாள்கள் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டபின் சென்னை திரும்புகிறார். டார்ஜிலிங்கில் உள்ள கல்லூரியிலும், தனி வீடு ஒன்றிலும் படப்பிடிப்பு நடந்தது.

ரஜினி மட்டும் டார்ஜிலிங்கில் இருந்து நாளை ( ஜூலை 10-ம்தேதி) சென்னை திரும்புகிறார். ஒரு வாரம் ஓய்வு எடுக்கிறார். அப்போது, மக்கள் மன்றப் பொறுப்பாளர்களுடன் முக்கியமான ஆலோசனை நடத்துகிறார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் டார்ஜிலிங்கில் இருந்து டேராடூன் செல்கிறார்கள். அங்கே, 15 நாள்களுக்கு மேல் ஷூட்டிங் நடக்க உள்ளது. ரஜினி, சென்னையிலிருந்து டேராடூன் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார். இமயமலை அருகிலுள்ள டேராடூன், ரஜினிக்குப் பிடித்த ஸ்பெஷல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. 

      

நீங்க எப்படி பீல் பண்றீங்க