வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:21:40 (09/07/2018)

கடலூரில் சாலைமறியல்: ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கைது!

கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்தனர். 

கடலூர்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் 6 வது நாளாகக் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடவும், இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தும் விடுமுறை நாள்களில் களப்பணி ஆய்வு செய்வதைக் கண்டித்தும், அற்ப காரணங்களுக்காக விளக்கம் ஏதும் கேட்காமல் நடைமுறை விதிகளைப் பின்பற்றாமல் பணியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாகக் கைவிடக் கோரியும் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாள்தோறும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, சாலை மறியல் செய்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.